கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!
கேரள வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளிடமிருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கேரள மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. கேரள வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் மீது மாநில காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இதில் தப்பிச்சென்ற சந்து என்கிற தீபக் மற்றும் லக்ஷ்மி ஆகிய இருவரையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்களிடமிருந்து மடிக்கணினி, பென்டிரைவ், செல்போன்கள் ஏகே 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கேரள மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருந்து ஆயுதப் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ பதிவும் கிடைத்துள்ளன.
அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் மாவோயிஸ்டுகளை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்துவது, இரகசிய குறியீடுகள் மூலம் சதித்திட்டங்களை பரிமாறிக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்கள் சிக்கியுள்ளதாக கேரள மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




