அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிஞர் தேர்வின் வினாத்தாள் வெளியானதால் இறுதி நேரத்தில் வேறு வினாத்தாள் வழங்கப்பட்டு தேர்வு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் வேதியியல் பாடத்திற்கான தேர்வு நேற்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவிருந்தது.
இதற்கான வினாத்தாள் முன்கூட்டியே அனுப்பபட்டிருந்த நிலையில் 12.30 மணியளவில் வினாத்தாள் வெளியானதாகவும், அதனால் கடைசி நேரத்தில் மாற்று வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டு மதியம் 2.30 மணிக்கு தேர்வு தொடங்கியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டபோது விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.