பெண் சார்ஆட்சியரை கன்னத்தில் அறைந்த இளைஞர் கைது

சேலம் மாவட்டத்தின் பெண் சார் ஆட்சியரை கன்னத்தில் அறைந்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமத்தில் துணை ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியர் சுசிலா ராணி மேற்பார்வையில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் கள ஆய்வு பணி நடைபெற்றது.

 

குட்டை மேடு என்ற பகுதியில் அவர்கள் பள்ளி மாணவர்களுடன் களஆய்வு மேற்கொண்டபோது இந்த பணியில் மாணவர்களை ஈடுபடுத்த தங்களிடம் உத்தரவு உள்ளதா என்று கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் சுசிலா ராணியிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

 

அப்போது அவர் சுசிலா ராணியை கன்னத்தில் அறைந்துள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் படி வழக்கு பதிவு செய்த போலீசார் பிரபாகரன் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


Leave a Reply