தூத்துக்குடி விண்வெளி தொழிற்பூங்கா ஒப்பந்தம்: விஜய்யிடம் வாழ்த்துப் பெற்ற அமைச்சர் கீர்த்தனா
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (17.06.2026) தலைமைச் செயலகத்தில், தொழில் துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார் இ.ஆ.ப., மற்றும் டிட்கோ (TIDCO) தலைவர் முனைவர் தா. கார்த்திகேயன் இ.ஆ.ப. ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
கடந்த 11.06.2026 அன்று தமிழ்நாடு அரசும், இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையமும் (IN-SPACe) இணைந்து, தூத்துக்குடி மாவட்டம் அல்லிக்குளத்தில் அமையவுள்ள விண்வெளி உற்பத்தி தொழிற்பூங்காவில் “விண்வெளி வாகனங்கள் பொதுத் தொழில்நுட்ப வசதி மையம் (CTF)” அமைப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த முக்கிய ஒப்பந்த நகலினை முதலமைச்சரிடம் காண்பித்து, இத்திட்டத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்துக் கலந்துரையாடி அவர்கள் வாழ்த்துப் பெற்றனர்.





