--- --:--:-- --

த.வெ.க அரசின் முகமூடி கிழிந்தது – நயினார் நாகேந்திரன்

5

.வெ.க அரசின் முகமூடி கிழிந்தது – நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்
தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை வெள்ளை அறிக்கை குறித்துத் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், த.வெ.க அரசின் இந்த நிதிநிலை வெள்ளை அறிக்கை மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் மூலம் அவர்களின் உண்மையான முகமூடி கிழிந்துவிட்டதாகவும் சாடியுள்ளார். மேலும், இந்த நடவடிக்கை “மரக்கட்டையில் செருகியிருந்த ஆப்பை அசைத்து வால் மாட்டிய குரங்கின் கதையாய் முடிந்துள்ளது” என்று ஒரு பழமொழியைச் சுட்டிக்காட்டி த.வெ.க அரசை பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மிகக் கடுமையாக எள்ளி நகையாடியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon