காங்கேயம் தொகுதி கிராமங்களில் அமைச்சர் சாமிநாதன் வாக்கு சேகரிப்பு!
தேர்தல் நெருங்கிய நிலையில் இரவிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் சாமிநாதன்
தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அமைச்சர் சாமிநாதன் காங்கேயம் மற்றும் வெள்ளக்கோவில் பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு தந்தனர்.
காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாந்தபுரம் விநாயகர் கோவில், நடுப்பாளையம் மற்றும் மாந்தபுரம் மேடு பகுதிகளில் பிரச்சாரம் செய்தபோது, பெண்கள் அவருக்குத் திரளாகத் திரண்டு வந்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து அரண்மனைகாட்டுப்புதூர், மோளக்கவுண்டன்வலசு மற்றும் சடையப்பா நகர் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கிய அமைச்சர், முதியவர்களிடம் ஆசி பெற்று வாக்கு கேட்டார்.

பாப்பம்பாளையம், சேமலைக்கவுண்டன்வலசு, வேப்பம்பாளையம் மற்றும் அனுமந்தபுரம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தை நிறைவு செய்த அவர், அப்பகுதி மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, மீண்டும் வெற்றி பெற்றவுடன் அனைத்துப் பணிகளும் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் சாமிநாதன் வாக்குறுதி அளித்தார்.
இந்தப் பிரச்சாரத்தின் போது திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் உடனிருந்து அமைச்சர் சாமிநாதனுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். தொகுதி முழுவதும் அமைச்சரின் இந்தப் பயணம் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.





