--- --:--:-- --

ரூ.8000 கூப்பன் விவகாரம் – பெண் தற்கொலை – தி.மு.க-வுக்கு விஜய் கடும் கண்டனம்

6

.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: திருச்சி மண்ணச்சநல்லூரில் திமுகவினர் வழங்கிய 8,000 ரூபாய் மதிப்பிலான போலி கூப்பன் விவகாரத்தில் ஏற்பட்ட மன உளைச்சலால், சகோதரி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தேர்தலை ஒட்டி மக்களை ஏமாற்றும் நோக்கில் திமுக இத்தகைய கூப்பன்களை விநியோகித்து வருவதாகவும், அப்போது ஏற்பட்ட ஆபாச வசவுகளைத் தாங்க முடியாமல் அந்தப் பெண் உயிரிழந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சியினர், அதிகாரப் பசிக்காக ஏழை மக்களை ஏமாற்றும் ‘சதுரங்க வேட்டை’ போன்ற இந்த மோசடிச் செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் தலையிட்டு இத்தகைய ஜனநாயக விரோதக் கூப்பன் விநியோகத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று த.வெ.க தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon