--- --:--:-- --
Dineshkumar

தெற்கு தொகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் தினேஷ்குமார்

திருப்பூர்: திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் என். தினேஷ்குமார், தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

தேர்தல் களப்பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னாள் மேயரான தினேஷ்குமார் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட முக்கிய தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார்.

அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அவர், “தொழில் துறையினரின் ஒத்துழைப்பு திருப்பூரின் முன்னேற்றத்திற்கு மிக அவசியம்; திராவிட மாடல் ஆட்சி தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

 

தினேஷ்குமார்
வாக்கு சேகரிப்பின்போது குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தார் தினேஷ்குமார்.

முன்னதாக, திருப்பூர் தெற்கு மாநகரக் கழகச் செயலாளர் டி.கே.டி. மு. நாகராஜ் தலைமையில் நடைபெற்ற 50-வது வட்டக் கழக நிர்வாகிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் தினேஷ்குமார் பங்கேற்றார்.

தினேஷ்குமாரின் இன்றைய வாக்கு சேகரிப்பு

தேர்தல் பிரசாரத்தின் தொடர்ச்சியாக, இன்று (ஏப்ரல் 10) மாலை, திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் உள்ள வார்டுகள் 34, 34A, 35, 35A ஆகியவற்றில் வீடு வீடாகச் சென்று அவர் வாக்கு சேகரிக்க உள்ளார்.

அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த மக்கள் சந்திப்பு நடத்தப்பட உள்ளது. “மக்களின் வரவேற்பு திமுக அரசின் சாதனைகளுக்குச் சான்றாக உள்ளது; வெற்றி உறுதி” என தினேஷ்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon