--- --:--:-- --

ரூ.600 கோடி மோசடி புகார்-த.வெ.க. வேட்பாளருக்கு சிக்கல்

5

மிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30-ந் தேதி தொடங்கியது. அரசியல் கட்சி தலைவர்கள் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள தி.மு.க. உதயநிதி ஸ்டாலின், வேலூரில் பேசியபோது, இன்றைக்கு பா.ஜ.க., ஏ.பி.சி என்று பட டீம்களை இறக்கி இருக்கிறார்கள். எத்தனை டீம் வந்தாலும் வெல்லப்போவது நம்ம தி.மு.க. டீம் தான். நம்மதான் மீண்டும் சாம்பியன் என்று பேசியுள்ளார்.

 

சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள தே.மு.தி.க 10 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், நேற்று (ஏப்ரல் 1) திருத்தணியில் இருந்து தனது பரப்புரையை தொடங்கிய பிரேமலதா விஜயகாந்த், திருத்தணி முருகனை நேரில் சந்தித்து, வெற்றிவேலை அவரது பாதத்தில் வைத்து, கும்பிட்டு பரப்புரைக்கு வந்துள்ளேன் என்று கூறி, திருத்தணி தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

 

தி.மு.க. கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிடும் ம.தி.முக. 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம், சீர்காழி தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், திடீர் முடிவாக 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். அவரது முடிவுக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon