--- --:--:-- --

ஆதவ் அர்ஜுனா கார் மோதி காவலர் படுகாயம்..!

4

மிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஆனால் பறக்கும் நிலையில் அரசியல் கட்சியின் தலைவர்கள் தத்தம் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், திருச்சியில் ஏப்ரல் 2, இன்று தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

பிரச்சாரம் முடிந்து விமான நிலையம் திரும்பும்போது தமிழக வெற்றிக்கழக நிர்வாகியும், வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான ஆதவ் அர்ஜுனா கார் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் சதீஷ் காலில் ஏறி இறங்கியது. இதனால் காவலரின் கால் உடைந்ததாக கூறப்படுகிறது. வலியால் துடித்த காவலரை அங்கிருந்து தமிழக வெற்றி கழகத்தினர் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

 

நடக்கக்கூட முடியாத அளவுக்கு அந்த காவலர் வலியால் துடித்த சம்பவம் மனதை கனக்கச் செய்தது.
முன்னதாக விஜய் பரப்புரை மேற்கொள்ளும் இடங்களில் எல்லாம் இப்படி சிறு பெரு அசம்பாவிதங்கள் தொடர்வது வாடிக்கையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon