தமிழ்நாடு மக்கள் குறித்து எதுவும் தெரியாமல் விஜய் கனவுலகில் உள்ளார்: பியூஷ் கோயல் கடும் விமர்சனம்
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் குறித்து மத்திய அமைச்சரும் பா.ஜ.க மேலிட தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் தமிழ்நாட்டைப் பற்றியோ அல்லது இங்குள்ள மக்களைப் பற்றியோ எதுவுமே தெரியாமல் பேசி வருவதாகக் குற்றம் சாட்டினார்.
விஜய் ஒரு மாயையான கனவுலகில் வாழ்ந்து கொண்டிருப்பதாகச் சாடிய பியூஷ் கோயல், வரவிருக்கும் தேர்தலில் அவர் ஒரு குறிப்பிட்ட அளவு வாக்குகளை மட்டுமே பெறுவார் என்றும் எள்ளி நகையாடினார். தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விஜய்யின் அரசியல் புரிதல் குறித்து மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.





