காலி பாட்டில் திட்டத்துக்கு எதிர்ப்பு: டாஸ்மாக் கடைகள் மூடல் – அரசுக்கு ரூ.10 கோடி இழப்பு
காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாக குற்றம்சாட்டி, அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பல டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் மூடப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 144 டாஸ்மாக் கடைகள் செயல்படாமல் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடைகள் மூடப்பட்டதால் மதுபான விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு, தமிழக அரசுக்கு சுமார் ரூ.10 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.





