இசக்கி சுப்பையா பதவி விலகலை ஏற்றார் சபாநாயகர்..!
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையாவின் பதவி விலகல் கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். முன்னதாக, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்த இசக்கி சுப்பையா, தனது எம்எல்ஏ பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை அவரிடம் நேரிடையாக ஒப்படைத்திருந்தார்.
இசக்கி சுப்பையா முதலில் தட்டச்சு செய்யப்பட்ட கடிதத்தை வழங்கிய நிலையில், அது நிராகரிக்கப்பட்டு பின்னர் அவரது சொந்தக் கையெழுத்தில் எழுதப்பட்ட கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





