திமுக கூட்டணியில் விசிக களமிறங்கும் அந்த 8 தொகுதிகள்..!
10 தனித் தொகுதிகள், 5 பொதுத் தொகுதிகள் என மொத்தம் 15 தொகுதிகளின் விருப்பப் பட்டியலை விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவிடம் வழங்கியது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் விசிக 4 தனித்தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகள் என 6 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த முறை இரட்டை இலக்க எண்ணிக்கையிலான தொகுதிகளை கோரி வந்ததால், தொகுதி உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது.
இந்த, நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இன்று 8 தொகுதிகளுக்கு உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் உறுதியானது. இந்த 8 தொகுதிகளில், 6 தனித் தொகுதிகளிலும் மற்றும் 2 பொதுத் தொகுதிகளிலும் விசிக போட்டியிட உள்ளது.அந்தவகையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தக் கட்சி போட்டியிட வாய்ப்புள்ள உத்தேசத் தொகுதிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
திருப்போரூர், செய்யூர், நாகை, புவனகிரி, அரூர், காட்டுமன்னார்கோயில், கள்ளக்குறிச்சி, குன்னம், மயிலம், பெரியகுளம், சிவகங்கை, வானூர் அல்லது திண்டிவனம், கே.வி.குப்பம், ஸ்ரீபெரும்புதூர், சென்னை மாவட்டம் ( ஒரு தொகுதி ) – இந்த உத்தேசப் பட்டியலில் உள்ள தொகுதிகளில் இருந்து இறுதி செய்யப்பட்ட 8 இடங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





