--- --:--:-- --

சென்னையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!

9

சென்னை ஓட்டேரியில் பள்ளி மாணவியான 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அக்காவை காதலித்து விட்டு தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

சிறுமியை தனது அக்கா வீட்டிற்கு அழைத்துச் சென்ற சிலம்பரசன், ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார். சிலம்பரசன் என்ற இளைஞரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை ஓட்டேரி பகுதியில், தனது காதலியின் 14 வயது தங்கையை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

இது தொடர்பாக சிலம்பரசன் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரின் அக்காவை, சிலம்பரசன் என்ற இளைஞர் காதலித்து வந்துள்ளார். இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாருமே சம்மதம் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக, சிலம்பரசன் தனது காதலியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

 

வருங்கால மருமகன் என்ற முறையில் குடும்பத்தினரும் அவரை நம்பி பழகி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த மாணவியைப் பள்ளியிலிருந்து அழைத்துச் செல்வதாகக் கூறி, சிலம்பரசன் தனது சகோதரி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து, 14 வயது சிறுமி என்றும் பாராமல் ஆசை வார்த்தைகளைக் கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது, தனது அக்காவின் காதலன் சிலம்பரசன் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதை அழுதுகொண்டே மாணவி தெரிவித்துள்ளார்.

 

இதைக்கேட்டு நிலைகுலைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார், சிலம்பரசன் மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், காதலியின் தங்கையையே வன்கொடுமை செய்த இளைஞரின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Right Menu Icon