--- --:--:-- --

உருண்டு போய் பதவியைப் பெற்ற ஒருவர்: இ.பி.எஸ் மீது பன்னீர் செல்வம் தாக்கு

10

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை ஆலோசனைக் கூட்டத்தில், அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். திமுகவில் இணைந்த பிறகு அவர் கலந்துகொள்ளும் முதல் கட்சி நிகழ்ச்சி இது.

 

கூட்டத்தில் உரையாற்றிய ஓ.பி.எஸ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைப் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாகச் சாடினார். குறிப்பாக, “உருண்டு போய் பதவியைப் பெற்ற ஒருவர்” என ஈ.பி.எஸ்-ஸை விமர்சித்த அவர், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் வரும் தேர்தல் பணிகள் குறித்தும் நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

Right Menu Icon