--- --:--:-- --

விஜய்யை நேரடியாக விமர்சித்த ரஞ்சனா நாச்சியார்!

3

வெக கட்சியின் நிர்வாகியான ரஞ்சனா நாச்சியார், சமீப காலமாகவே தனது கட்சி தலைவர் விஜய்யை அடிக்கடி விமர்சித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் மகளிர் தின விழாவில் தவெக தலைவர் விஜய் பேசிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்த அவர், அடுத்த குழந்தைக்கு தாய் மாமனாக இருப்பதற்கு முன், பெற்ற குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பது முக்கியம் இல்லையா என பல அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டிருந்தார்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பொதுச் செயலாளராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா, இன்னும் அறுபது நாட்களில் நாம் ஆட்சிக்கு வருவோம்; அதன் பிறகு எல்லா FIR-களையும் delete செய்து விடுவோம் என்று கூறியதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்த தவெக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், இன்று ஆதவ் அர்ஜுனா பொதுமக்கள் முன்னிலையில் “இன்னும் அறுபது நாட்களில் நாம் ஆட்சிக்கு வருவோம்; அதன் பிறகு எல்லா FIR-களையும் delete செய்து விடுவோம்” என்று கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் உரை மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை உண்மையே என்னவென்றால் ஒரு FIR என்பது அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள விஷயம் அல்ல; அது சட்டத்தின் கீழ் நடைபெறும் குற்றவியல் செயல்முறை.

 

அதை TVK கட்சியின் முக்கியப்பொறுப்பில் உள்ள ஆதவ் அர்ஜுனா “delete செய்து விடுவோம்” என்று பேசுவது சட்டத்தின் அடிப்படை அமைப்பை புரிந்துகொள்ளாத மனநிலையைக் காட்டுகிறது என்று கூறினார். மேலும், இன்று அரசியல் மேடைகளில் பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையையும் இளைஞர்களும், teenage மாணவர்களும் மிகவும் தீவிரமாக கவனித்து வருகின்றனர். அந்த இளம் தலைமுறைக்கு அரசியல் என்ன கற்றுக்கொடுப்பது? சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதையா? அல்லது அதிகாரம் வந்தால் சட்டத்தை அழித்து விடலாம் என்ற தவறான எண்ணத்தையா? சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில் “நாம் ஆட்சிக்கு வந்தால் நம் மாவட்ட செயலாளர்கள் மீது பதியப்படும் FIR-களை delete செய்து விடுவோம்” என்று பேசுவது அரசியல் மற்றும் சட்டம் ஒழுங்கு பற்றிய விழிப்புணர்வு அல்ல.

 

அது இளைஞர்களை சட்டத்துக்கு எதிரான தவறான மனநிலைக்கு தள்ளும் அபாயகரமான அரசியல் மொழி என குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டில் சட்டம் நீதிமன்றங்களின் கீழ் இயங்குகிறது; அரசியல் வாக்குறுதிகளின் கீழ் அல்ல. எனவே இத்தகைய கருத்துகள் அரசியல் பொறுப்புடன் பேசப்பட வேண்டியவை.நம் கட்சியின் தலைமை இத்தகைய கருத்துகளை பொது மேடைகளில் பேசும் நபர்களை ஊக்குவிக்கிறதா? ஒரு அரசியல் இயக்கம் வளர வேண்டுமெனில் அதில் அறிவு, பொறுப்பு, சட்ட விழிப்புணர்வு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஆனால் சட்டத்தைப் பற்றிய அடிப்படை புரிதலே இல்லாத கருத்துக்கள் கட்சியின் மேடைகளில் பேசப்படத் தொடங்கினால், அது அந்த இயக்கத்திற்கே தீங்கு விளைவிக்கும்.ஒரு அரசியல் தலைவர் தன்னைச் சுற்றி அறிவுடையவர்களை வைத்திருக்க வேண்டும் என விமர்சித்தார்.

Right Menu Icon