--- --:--:-- --

தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்..!

3

மிழ்நாட்டில் நாளை முதல் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டில், கோடை வெயிலின் தாக்கம் மெதுவாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

 

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் மார்ச் 16ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வறண்ட வானிலையே காணப்படும் என்றும், நாளை முதல் 14 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon