கண்ணகி நீதி கேட்ட இந்த மண்ணில், தமிழக மக்களின் நலனுக்காக நீதி கேட்டு வருகை தந்திருக்கின்றார் நம்முடைய பிரதமர் மோடி. உலக நாட்டு தலைவர்கள் எல்லாரும் போற்றி மகிழ்கின்ற, நேசிக்கின்ற, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளே வணங்கி நிற்கின்ற மாபெரும் தலைவன். பாரத தாயின் தவப்புதல்வன். பாரத தேசம் கண்டெடுத்த நல் முத்து. வாராது வந்த மாமணியான நம் பிரதமரை நான் வரவேற்கிறேன் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.