தேர்தல் விருப்ப மனுக்களை சமர்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு – த.வெ.க அறிவிப்பு
தேர்தல் விருப்ப மனுக்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை த.வெ.க நீட்டித்துள்ளது. முதல் நாள் தேர்தல் விருப்ப மனு நேரில் வழங்கப்பட்ட நிலையில் அதற்கு அடுத்த நாளில் இருந்து தேர்தல் வழங்கும் வழிமுறைகள் மாற்றப்பட்டது.
கியூஆர் கோடு மூலமாகவும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் த.வெ.க-வினர் வேண்டுகோளை ஏற்று அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






