திருவாடானையில் விறுவிறுப்பான மாட்டுவண்டி பந்தயம்: 45-க்கும் மேற்பட்ட வண்டிகள் பங்கேற்பு!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே குலநாத்தி பகுதியைச் சேர்ந்த வாலிபர் சந்தோஷ்நாதனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சார்பில் பிரம்மாண்ட மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.
தலைமை: திருவாடானை துணைக் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் அவர்கள் இந்தப் போட்டியைத் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
பந்தயமானது பெரிய மாடு மற்றும் சின்ன மாடு என இரண்டு பிரிவுகளாக, இரு கட்டங்களாக நடத்தப்பட்டது.மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 45-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் களமிறங்கின.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளில், இரு பிரிவுகளிலும் முதல் நான்கு இடங்களைப் பிடித்த வண்டிகளின் உரிமையாளர்களுக்குப் பரிசுத் தொகையும், வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

சாலையின் இருபுறமும் திரண்டிருந்த சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள், மிகுந்த உற்சாகத்துடன் வீரர்களைக் கூச்சலிட்டு உற்சாகப்படுத்தினர். போட்டியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க, திருவாடானை காவல் ஆய்வாளர் சதீஷ்பிரபு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




