--- --:--:-- --

தமிழகத்தில் இருமுனைப் போட்டிதான்… நான்கு முனை என்பது மாயை – விசிக தலைவர் திருமாவளவன்

1

மிழ்நாட்டில் இரண்டு முனை போட்டி மட்டுமே நிலவுவதாக கூறிய விசிக தலைவர் திருமாவளவன், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு திமுக விரைவில் அழைப்பு விடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் வியூகம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

 

கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகள் கேட்கப்படுமா என்ற கேள்விக்கு, “அதை முன்னரே யூகத்தின் அடிப்படையில் சொல்ல முடியாது” என்றும், “பேச்சுவார்த்தையின் போதே முடிவு செய்யப்படும்” என்றும் கூறினார். எதை முன்னிலைப்படுத்தி தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “இந்தத் தேர்தலில் பாஜக முன்வைக்கும் மதவாத அரசியல், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியல் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிரான சதி அரசியல் ஆகியவற்றை அம்பலப்படுத்துவதே திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் முதன்மையான பரப்புரையாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

 

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த கேள்விக்கு, ஒவ்வொரு கட்சியும் வாக்குறுதிகளைத் தருவது இயல்பு என்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் விரைவில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிடும் என்றும் தெரிவித்தார். மக்கள் எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து உரியத் தீர்ப்பை வழங்குவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Right Menu Icon