--- --:--:-- --

பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் – அண்ணாமலை

1

பாஜக தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ.க.வில் 234 தொகுதிகளிலும் தலைவர்களின் சுற்றுப்பயணத்துக்கு திட்டமிட்டுள்ளது.

 

இதில் தமிழக பாஜக முன்னாள் தலைவர்களான அண்ணாமலை, எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எச்.ராஜா, உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு தலா 4 தொகுதிகள் முதல் 6 தொகுதிகள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டனர். அதன்படி சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு பாஜகவின் சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, சட்டமன்ற தேர்தல் தொகுதி பொறுப்பாளர் பணிகளை மேற்கொள்ள இயலாத நிலையில் உள்ளேன் எனவும் தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தொகுதி பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக நயினார் நாகேந்திரனிடம் ஏற்கெனவே கூறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 

பாஜக கேட்டுக்கொண்டால் சட்டப்பேரவை தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்கிறேன் எனவும் தேர்தல் பணிகளில் ஈடுபட இயலாது எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலில் போட்டியிடுவது குறித்து காலமும், நேரமும் தான் முடிவு செய்யும் என்றார்.

Right Menu Icon