சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர், பொங்கல் வைத்து மகிழ்ந்தார். அதன்பின் பசுக்களுக்கு உணவளித்த முதலமைச்சர், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சர் சிலம்பம் சுற்றி அசத்தினார். இந்த விழாவில் பேசிய முதலமைச்சர், திமுக அரசு பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாகக் கூறினார். கொளத்தூர் தொகுதியில் ஒரு நிகழ்ச்சி நடக்கிறதென்றால் அதில் ஒரு ஸ்ப்ரீட்டும், வேகமும், எனர்ஜியும் வந்துவிடுகிறது.” என்றார்.
திமுக-வினரை போன்று யாராலும் வேலை செய்ய முடியாது என்று பாஜகவினரே கூறி வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். வரும் தேர்தலில் சிறப்பான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்போம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.






