--- --:--:-- --

தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு..!

1

ங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை எட்டி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் நேற்று குறைந்திருந்தது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

 

அதன்படி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.11,770க்கும் சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.94,160க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.9,815க்கும் சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.78,520க்கும் விற்பனையானது. வெள்ளி விலை மட்டும் அதிரடியாக கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.180க்கும் ஒரு கிலோ ரூ.1,80,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

இந்நிலையில், இன்று காலை தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,840க்கும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதேபோல் 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,875க்கும் சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.79,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மட்டும் அதிரடியாக கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.183க்கும் ஒரு கிலோ ரூ.1,83,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Right Menu Icon