காதலிக்க மறுத்த 12 ஆம் வகுப்பு மாணவி கத்தியால் குத்தி கொலை..!
ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேராங்கோட்டை பகுதியை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவி இன்று காலை பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மாணவியை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார்.
ஆனால் பள்ளி மாணவி காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரத்தில் இளைஞர் ஷாலினியை கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த துறைமுக காவல் நிலைய போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து பள்ளி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் யார் என்று தீவிர விசாரணை நடத்தினார். இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் முனியராஜ் என்பது தெரிய வந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். பள்ளி சென்ற மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





