--- --:--:-- --

திண்டுக்கல்லில் தீபாவளி சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி – பாதிக்கப்பட்டவர்கள் புகார்

7

திண்டுக்கல்லில் தீபாவளி சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளனர்.

திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் தீபாவளிச் சீட்டு நடத்துவதாக கூறி பேகம்பூர், மேட்டுப்பட்டி, பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்துள்ளார்.தற்போது தீபாவளி நெருங்கும் நிலையில் சீட்டு பணம் செலுத்தியவர்கள் பணத்தை திருப்பி கேட்ட போது குடும்பத்துடன் சரவணன் தலைமறைவாகியுள்ளார்.

 

இந்த நிலையில் சரவணன் மீது நடவடிக்கை எடுக்குமாறும், தீபாவளி சீட்டு பணத்தை பெற்றுத்தருமாறு கோரி பாதிக்கப்பட்டவர்கள் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon