சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலக .வளாகத்தில் இன்று காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
இதில் காவலர் நினைவுச் சின்னத்தில் முப்படை அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் தமிழக டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் காவலர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.
காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு கோவையில் பொது மக்களின் உயிர் காக்க தன் உயிர் நீத்த காவலர்கள் 3 பேருக்கு 21 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது. குறிப்பாக 1997 ஆம் ஆண்டு பழிவாங்கும் நோக்கில் கொலைசெய்யப்பட்ட தலைமை காவலர் செல்வராஜ் 2011-ம் ஆண்டில் விபத்து ஏற்படுத்திய வரை பிடிக்க முயன்ற போது உயிரிழந்த தலைமை காவல் அதிகாரி சந்திரசேகர் உள்ளிட்ட மூன்று பேருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் பணியின் போது உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் 21 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை செலுத்தினர். சேலத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், காவல் ஆணையர் செந்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் போலீசார் கருப்பு நிற பேஜ் அணிந்து கலந்து கொண்டனர்.