கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஜினிகாந்த் வழங்கிய வீடு!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் போது வீடுகள் கட்டிக் கொடுத்து வீட்டின் சாவியை வழங்கினார். கடந்த ஆண்டு தாக்கிய கஜா புயலால் நாகை மாவட்டத்தை சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் வீடுகளை இழந்த 10 பேருக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீடும் சுமார் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் பயனாளிகளை இன்று தனது வீட்டில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு புதிதாக கட்டப்பட்ட வீட்டின் சாவியை வழங்கினார்.


Leave a Reply