போரூர் தனியார் மருத்துவமனையில் அருள்நிதி அனுமதி – நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின்
போரூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருள்நிதியை நேரில் சந்தித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நலம் விசாரித்தார். சென்னை போரூர் ராமச்சந்திரா தனியார் மருத்துவமனையில் உள்ள உடையார் பிளாக் ஏழாவது தளத்தில் கால் வலி காரணமாக நேற்று அருள்நிதி அனுமதிக்கபட்டார்.
மேலும், வலி அதிகரிப்பு காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ள நிலையில் அவரை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் மேலும் உடல்நிலை மற்றும் அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அவருடன் எம்பி ஆ ராசா உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




