--- --:--:-- --

இறங்கிய தங்கம் விலை..!

4

க்டோபர் மாதத்தில் தங்கம் விலை அடிக்கடி அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு பிறகே தங்கம் விலை குறைய தொடங்கியது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை மாற்றம் செய்யப்பட்டது. காலை, மாலை என 2 வேளையும் அதிரடியாக தங்கம் விலை உயர்ந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கடைசியாக நேற்று மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,320க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 90,560க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

 

கடந்த சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த விலை உயர்வு நீண்ட காலத்திற்கு நீடிக்காது என்றும், விரைவில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கடுமையாக குறையக்கூடும் என்றும் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி வாங்க சரியான நேரம் எது என்று தற்போது இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

 

அதன் படி இன்று (நவம்பர் 7) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.11,270க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.90,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.9,400க்கும் சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.75,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.165க்கும், ஒரு கிலோ ரூ.1,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Right Menu Icon