--- --:--:-- --

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று விண்ணில் பாயும் எல்​விஎம்-3 ராக்​கெட்..!

2

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சிஎம்​எஸ்​-03 செயற்கைக்​கோள் உடன் எல்​விஎம்-3 ராக்​கெட் இன்று ஏவப்படவுள்ள நிலையில், 24 மணிநேர கவுண்டவுன் தொடங்கியது. நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த ஆயிரத்து 600 கோடி ரூபா​யில் அதிநவீன சிஎம்​எஸ்​-03 செயற்கைக்​கோளை இஸ்ரோ வடிவ​மைத்​துள்ளது.

 

ஆந்​திர மாநிலம் ஸ்ரீஹரி​கோட்​டா​வில் உள்ள ஏவுதளத்தில் இருந்து எல்​விஎம்-3 ராக்​கெட் மூலம் செயற்​கைக்​கோள்இன்று மாலை 5.26 மணிக்கு விண்​ணில் செலுத்​தப்பட உள்ளது. இதற்கான 24 மணிநேர கவுன்​ட​வுன் நேற்று மாலை தொடங்கியது. முன்னதாக இந்த திட்டம் வெற்றியடைய வேண்டி திருப்பதி கோயிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர்.

 

சிஎம்எஸ்-03 செயற்கைக்கோளின் மாதிரியை ஏழுமலையான் திருவடிகளில் சமர்ப்பித்து வேண்டிக் கொண்டனர்.மேலும் 4 ஆயிரத்து 410 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், இந்​தி​யக் கடலோர எல்லைகளை கண்​காணிப்​பதுடன், போர்க் கப்​பல்​கள், விமானங்​கள் இடையே தொலைத் தொடர்பு சேவையை மேம்​படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Right Menu Icon