--- --:--:-- --

அதிமுகவை அமித் ஷாவிடம் விழுந்து சரண்டர் செய்துவிட்டார் ஈபிஎஸ் – முதல்வர்

1

ட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக நிர்வாகிகளுக்கான பயிற்சிக் கூட்டம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. ’என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பெயரிலான இந்த பயிற்சிக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 

அப்போது பேசிய அவர், 2021 தேர்தல் தமிழ்நாட்டை கொத்தடிமை அதிமுக கூட்டத்திடம் இருந்து மீட்ட தேர்தல் என்றும், 2026 தேர்தல் என்பது தமிழ்நாட்டை பாஜக – அதிமுக கும்பலிடம் இருந்து பாதுகாப்பதற்கான தேர்தல் என்றும் தெரிவித்தார். ஐந்தாண்டு காலம் வளப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டை கபளீகரம் செய்து நாசம் செய்ய திட்டமிடும் கூட்டத்தை வேரடி மண்ணோடு வீழ்த்தியாக வேண்டும் என்றும் சூளுரைத்தார்.

 

எதிர்க்கட்சியான அதிமுக தனது சொந்தக் கட்சியின் உரிமைகளையே பாஜகவிடம் அடகு வைத்துவிட்ட நிலையில், மக்களின் உரிமைகளைப் பற்றி கவலைப்பட அதற்கு நேரமிருக்காது என்றும் விமர்சித்தார். அதிமுக, பாஜக கூட்டணியை தமிழ்நாடு மக்களும் விரும்பவில்லை, அதிமுகவினரும் விரும்பவில்லை என்றும் சாடினார்.

 

எடப்பாடி பழனிசாமி விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என எல்லோரையும் கூட்டணிக்கு அழைத்து பார்த்ததாகவும், ஆனால், யாரும் செல்லவில்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். பெயரளவுக்காவது திராவிட கட்சியாக இருந்த அதிமுகவை அமித் ஷாவிடம் விழுந்து சரண்டர் செய்துவிட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி மீது முதலமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

 

2026 தேர்தலில் திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடங்கியது என்பதுதான் தலைப்பு செய்தியாக இருக்கும் என்றும் முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

Right Menu Icon