ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 57,000 கனஅடியாக உயர்வு
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 50,000 கன அடியில் இருந்து 57,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




