--- --:--:-- --

கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்- வானிலை மையம்

8

அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வங்காள விரிகுடா கடலில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில், கேரளாவில் இன்று மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

5 மாவட்டங்களில் இன்று இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், மலையோர பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon