அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், உடனடியாக மோப்ப நாய் உதவியுடன் களத்தில் இறங்கிய போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.






