உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட ஆதரவு: ஜெய்சங்கர்
ரஷ்யா – உக்ரைன் இடையேயான மோதலுக்கு விரைவில் தீர்வு காணவும், நீடித்த அமைதியை நிலைநாட்டுவதற்கும் இந்தியா தனது ஆதரவை அளிப்பதாக EAM ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை உக்ரைனின் நிதியமைச்சர் ஆண்ட்ரி சிபியா உடன் அவர் பேசியுள்ளதாக தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அப்போது இந்தியா – உக்ரைன் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் மோதல் குறித்து விவாதித்ததாகவும் கூறியுள்ளார்.





