போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – விஜய்
அமெரிக்காவின் 50% வரி விதிப்பு நடைமுறையால் தமிழக ஏற்றுமதியாளர்கள் மீள முடியாத அளவிற்கு கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஏற்றுமதி தொழிலைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தொழில் மற்றும் வேலைவாய்ப்பினைப் பாதுகாப்பதற்காக ஒன்றிய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.





