துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி திட்டம்
அடுத்த மாதம் 9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளது.
இதற்காக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் கருத்தை பெற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முடிவெடுத்துள்ளார். அதேவேளை, துணை ஜனாதிபதி வேட்பாளரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்த பின்னர் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





