--- --:--:-- --

தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் தமிழ்நாடு எம்.பி.க்கள்!

1

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி, இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். தூத்துக்குடி எம்.பி.யும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி, தனது தொகுதிப் பிரச்சனை குறித்து பிரதமர் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

 

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள கனிமொழி எம்.பி., “பிரதமர் நரேந்திர மோடியை இன்று டெல்லியில் சந்தித்தேன். எனது தொகுதி மற்றும் தமிழ்நாடு தொடர்பான முக்கியப் பிரச்சனைகள் குறித்தும், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நிலவி வரும் பிரச்சனைகள் குறித்தும் விவரித்தேன்.

 

மேலும், தூத்துக்குடி விமான நிலைய மேம்பாட்டிற்கு கொடுக்கப்பட்ட ஆதரவிற்கு அவருக்கு நன்றி தெரிவித்தேன்” எனப் பதிவிட்டுள்ளார்.ரூ. 452 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தூத்துக்குடி புதிய விமான முனையக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

 

திமுக கூட்டணியில் இருக்கும் மநீம தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல் ஹாசன் நேற்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, கீழடி தொடர்பாக கோரிக்கை வைத்திருந்தார்.
அது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.

 

ஒரு கலைஞனாகவும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்திருக்கிறேன். அவற்றுள் தலையாயது கீழடி.தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்” எனத் தெரிவித்திருந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon