திருப்பூரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட இருவர் கைது!
திருப்பூர்: காலேஜ் ரோடு அணைப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி சம்மந்தப்பட்ட வீட்டை கண்காணித்தனர்.
இதில், அந்த வீட்டிற்குச் சென்ற இருவரை விசாரித்ததில் அவர்கள் தினேஷ் குமார்(28), மணிகண்டன்(34) ஆகிய இவர்கள், 25 வயது பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிய வந்ததையடுத்து போலீசர் இருவரைக் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




