அச்சுதானந்தன் தொடர்ந்து கவலைக்கிடம்..!
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. மாரடைப்பு ஏற்பட்டதால் கடந்த 23-ம் தேதி திருவனந்தபுரம் தனியார் ஹாஸ்பிடலில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அச்சுதானந்தனுக்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஹாஸ்பிடலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் சென்று உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.






