விரும்பும் கடவுளை வணங்குவது ஜனநாயக உரிமை: இபிஎஸ்
ஒவ்வொருவரும் தான் விரும்பும் கடவுளை வழிபடுவது ஜனநாயக உரிமை என கருத்து தெரிவித்துள்ள இபிஎஸ் மதுரையில் நடைபெறவுள்ள பாஜக முருக மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக அரசு மீதான மக்களின் அதிருப்தியை திசை திருப்பும் வகையிலேயே கீழடி உள்ளிட்ட பிரச்னைகளை சோஷியல் மீடியாவில் பரப்புவதாக சாடினார். இதற்கு, 2026 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




