--- --:--:-- --

ப்ளூடூத் முறையால் சிக்கல் – அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஸ்டிரைக்

5

கைரேகை, கருவிழி பதிவுக்கு ப்ளூடூத் முறையால் கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கு இடையே மோதல் ஏற்படுகிறது; இதனை ஒரு வாரத்திற்குள் சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என ரேஷன் கடை ஊழியர்கள் அறிவிப்பு.

 

ரேஷன் கடைகளில் ப்ளு டூத் முறை கைரேகை, கருவிழி பதிவுகள் காரணமாக ஏற்படும் கால தாமதத்தால் பொருட்கள் விநியோகிப்பதில் பொதுமக்களின் கடும் அதிருப்தியையும், விரோதத்தையும் விற்பனையாளர்கள் அன்றாடம் சந்திக்க வேண்டியுள்ளது என்றும், இதை கண்டித்து ஜூலை மாதம் 14ஆம் தேதி முதல் கால வரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தமிழ்நாடு மாநில கூட்டுறவு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

 

இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ப்ளு டூத் முறை கைரேகை, கருவிழி பதிவுகள் காரணமாக ஏற்படும் கால தாமதத்தால் பொருட்கள் விநியோகிப்பதில் பொதுமக்களின் கடும் அதிருப்தியையும், விரோதத்தையும் விற்பனையாளர்கள் அன்றாடம் சந்திக்க வேண்டியுள்ளது. இது அரசுக்கும் மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்துகிறது.

 

ஒரு வார காலத்திற்குள் பொது விநியோகம் சீராக நடைபெறும் வகையில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். தவறினால் எதிர்வரும் 27.06.2025ஆம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவும், தொடர்ந்து எங்களது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால் எதிர்வரும் 14.07.2025 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் சங்கப் பணியாளர்களும், அங்காடிப் பணியாளர்களும் முழு அளவில் கலந்து கொள்வார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon