--- --:--:-- --

சாம்சங் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

2

சாம்சங் ஆலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக 30 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.

இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சிஐடியூ சாம்சங் தொழிலாளர் சங்கத்தினரும், சாம்சங் ஆலை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

 

சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியூ மாநிலத் தலைவர் சவுந்தரராஜன், சிஐடியூ தொழிற்சங்கத்தின் முன்னெடுப்பால், சாம்சங் நிர்வாகம் கூடுதலாக ஊதிய உயர்வு அளித்துள்ளது என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon