--- --:--:-- --

பாஜகவுடன் கூட்டணி இல்லை – தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார்

2

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது உறுதி என தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து பணிகள் செய்து வருகிறது.

 

ஒருபக்கம் திமுக தலைமையிலான கூட்டணியில், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமைத்த அதே கூட்டணி தொடர்ந்து வருகிறது.
மறுப்பக்கம் அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த நிலையில், திமுக கூட்டணியை வீழ்த்த விஜய் அக்கூட்டணியில் இணைவார் என தொடர்ந்து பேச்சுக்கள் எழுந்தது.

 

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெரிவித்துள்ளார்.

Right Menu Icon