--- --:--:-- --

தாக்குதலை நிறுத்தினாலும் இது நிச்சயம் தொடரும் – அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

1

ந்தியா – பாகிஸ்தான் இடையே தாக்குதல் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தாலும், தீவிரவாத்துக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்தது தொடரும் என மத்திய அரசு கூறியுள்ளது.

 

இந்தியாவின் எல்லையோர மாநிலங்களைக் குறிவைத்து மூன்று நாட்களாக இரவு பகலாக பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. இந்நிலையில், நேற்றும் பாகிஸ்தானின் தாக்குதல் தொடர்ந்த நிலையில், தாக்குதலை நிறுத்த இந்தியாவும் – பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டதாக பதிவிட்டார்.

 

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அதில் பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளிலும் இந்தியா எப்போதும் உறுதியாக இருக்கும் என்றார். துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கையை நிறுத்திக் கொள்வது குறித்து இந்தியா – பாகிஸ்தான் புரிந்துணர்வு செய்து கொண்டதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்து வடிவங்களிலும் உறுதியான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டை இந்தியா கடைப்பிடித்து வரும் நிலையில் அது தொடரும் என்றும் ஜெய்சங்கர் பதிவிட்டார்.

 

இதனிடையே, தாக்குதல் மற்றும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் இடையே எந்தவித முன், பின் நிபந்தனைகள் முன்மொழியப்படவில்லை என மத்திய வெளியுறவு அமைச்சகம் தரப்பில் தகவல் வெளியானது.தாக்குதல் நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தானே முதலில் தொடர்பு கொண்டதாகவும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது தொடர்ந்து நீடிக்கும் என்றும் வெளியுறவு அமைச்சகம் தரப்பில் தகவல் கூறப்பட்டது.

 

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விதித்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீடிக்கும் என்றும் தீவிரவாத்திற்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாடு தொடரும் என்றும் வெளியுறவு அமைச்சகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon