--- --:--:-- --

திருடிய செல்போனை திருப்பித்தர பேரம் பேசும் கில்லாடி திருடன்..!

download (8)

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சுற்றுவட்டார கிராமங்களில் செல்போன் திருடிவிட்டு பணம் கொடுத்தால் திருப்பித் தருவதாக பேரம்பேசும் திருடனை போலீசார் தேடி வருகின்றனர். கிராமத்தில் அங்கன்வாடி ஊழியரான நளினி என்பவரது வீட்டில் 16 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் செல்போன் திருட்டு போனது அந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட போது எதிர்முனையில் பேசிய திருடன் 7000 ரூபாய் கொடுத்தால் செல்போனை திருப்பித் தருவதாக பேரம் பேசியுள்ளார்.

 

5 ஆயிரம் ரூபாய் தருவதாக குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் நளினி அளித்த புகாரின் பேரில் பேரம் பேசியது திருடனை ஒலக்கூர் போலீசார் தேடி வருகின்றனர். அவனது பெயர் அய்யனார் என்றும் விரைவில் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Right Menu Icon