--- --:--:-- --

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது! விரைவில் திரும்புவேன் : ஹர்திக் பாண்டியா

images

முதுகுவலி காரணமாக அவதிப்பட்டு வந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா விற்கு லண்டனில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியின் போது ஹர்திக் பாண்டியா விற்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பல ஆட்டங்களில் விளையாடவில்லை.

 

இந்நிலையில் சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ள ஹர்திக் பாண்டியா விற்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த தகவலை ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது உங்களுக்கு எனது நன்றிகள் விரைவில் திரும்புவேன் என்று பதிவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon