கொலை செய்து விட்டு வீட்டில் கோழிக்கறி சாப்பிட்டு சென்ற கொலையாளிகள்

மதுரை அருகே நடைபெற்ற இரண்டு கொலைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு சம்பவங்களிலும் கொலை செய்தபின் கொலையாளிகள் கொலை மற்றும் கொள்ளை வழிப்பறியிலும் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த பிரமுகர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ளது.

 

தனிப்பட்ட ஊரைச் சேர்ந்த அமானுல்லா என்கிற காதர் பாஷா அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மதுரை புறநகர் மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு செயலாளராக பதவி வகித்துள்ளார். வழக்கறிஞரான இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. அதே பகுதியில் உள்ள பள்ளிவாசலிலும் முக்கிய பொறுப்பில் இருந்த காதர்பாஷா தான் தற்போது கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

 

ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள தனது இடத்தில் சொந்தமான குடிநீருக்கு நிலையம் கட்டி வந்த காதர் பாஷா அதனை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதன் பிறகு சில மணி நேரம் கழித்து பள்ளிவாசல் அருகே தனது இருசக்கர வாகனத்தின் அருகில் காதர்பாஷா ரத்த காயங்களுடன் கிடந்துள்ளார். அவ்வழியே சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்ததோடு காதர் பாட்ஷாவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்..

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் காதர்பாஷா ஏற்கனவே இறந்து விட்டதாக கூற அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதறி அழுதனர்.அங்கு சென்ற போலீசார் இருசக்கர வாகனத்தில் சென்ற காதர்பாஷா விபத்தில் மரணமடைந்துவிட்டார் என்ற கோணத்திலேயே விசாரணை நடத்தியுள்ளனர். கடைசியில் மர்ம நபர்கள் சிலர் காதர் பாட்ஷாவை அரிவாளால் வெட்டி ஏதும் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் தப்பிவந்த காதர்பாஷா அமர்ந்தபடியே உயிரிழந்தது தெரியவந்தது.

 

இந்த பரபரப்புக்கு இடையே தான் மற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவமும் நடந்துள்ளது. காதர்பாஷா பின் சடலத்தை பார்ப்பதற்காக ஊர் மக்கள் அனைவரும் மருத்துவமனையில் திரண்டிருந்தனர். இதனை பயன்படுத்திக் கொண்ட கொலையாளிகள் சத்தீஷ்கார் முகமது அன்சாரி ஆகியோரின் வீடுகளில் கதவை உடைத்து 15 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். உச்சகட்டமாக ஒரு வீட்டின் சமையலறையில் இருந்த கோரிக்கையையும் பாத்திரத்துடன் எடுத்து சென்று சாப்பிட்டு சென்றுள்ளனர்.

 

அந்த கொலையாளிகள் பள்ளிவாசலில் தொடர்பாக வெடித்த முன்விரோத தால் காதர்பாட்சா கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பிரமுகரை கொலை செய்த நபர்கள் தொடர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply